Maalaimalar
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படும் ஹாலோவீன், வித்தியாசமான வேடங்கள் மற்றும் பூசணிக்காய் விளக்குகளுக்குப் பெயர் பெற்றது.
ஹாலோவீன் கொண்டாட்டத்தின் வேர்கள் பழங்கால செல்டிக் மக்களின் ‘சாம்ஹைன்’ திருவிழாவுடன் தொடர்புடையவை.
குழந்தைகள் பேய் வேடமிட்டு வீடு வீடாகச் சென்று மிட்டாய்கள் பெறும் வழக்கம் ஹாலோவீனின் முக்கிய அம்சமாகும்.
பூசணிக்காயில் முகம் செதுக்கி விளக்கு வைப்பது ‘ஜாக்-ஓ-லான்டர்ன்’ என அழைக்கப்படுகிறது; இது ஹாலோவீனின் அடையாளமாக உள்ளது.
பேய், சூனியக்காரி, எலும்புக்கூடு போன்ற வேடங்களை அணிந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடுகின்றனர்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் ஹாலோவீன் பார்ட்டிகள், வீட்டு அலங்காரங்கள் மற்றும் பயமூட்டும் கதைகளுடன் கொண்டாடப்படுகிறது.
பயம் மட்டுமல்ல, நண்பர்கள், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் கொண்டாட்டமாக ஹாலோவீன் திகழ்கிறது.