முடி உதிர்வா? கடுக்காய் இருக்க கவலை எதற்கு..! கடுக்காய் HAIR PACK

undefined

ஆண்கள், பெண்கள்,சிறுவர்,சிறுமியர்,வயது முதிர்ந்தோர் என அனைவருக்குமான பொதுவான பிரச்சனை முடி உதிர்தல் தான்.
முடி உதிர்வதைத் தடுக்க இந்த பொருள் இருந்தாலே போதும் என்றால் அது கடுக்காய் தான்.
கடுக்காய் ஹேர் பேக் போட்டாலே முடி உதிர்வதை தடுத்துவிடலாம்.
1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும்.
கடுக்காய் பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும்.
1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.
கடுக்காய் ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும்.
முடி உதிர்வதையும் தடுக்க கடுக்காய் HAIR PACK உதவுகிறது.