ஜிம்முக்கு போறீங்களா.. உங்களுக்கான டயட் டிப்ஸ்...

Maalaimalar

காலை எழுந்தவுடன்

பாலுடன் ஓட்ஸ், நட்ஸ் மற்றும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் எலும்பு வலு பெரும்.

சிற்றுண்டி

தயிருடன் சியா விதைகள். பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்கள். இவ்வகை உணவுகள் தேகத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும்.

மதிய உணவு

கருப்பு அரிசி, பருப்பு வகை சார்ந்த உணவுகள் மற்றும் சிக்கன் அல்லது பன்னீர் சாலட் போன்ற புரதம் அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சிக்கு முன்

ஒரு வாழைப்பழம் மற்றும் பிளாக் காபி அல்லது ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் கலவைகள் எடுத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்னரே உட்கொள்ளவும்.

உடற்பயிற்சிக்குப் பின்

வே புரோட்டீன் ஷேக் அல்லது 2 வேகவைத்த முட்டைகள் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களுக்குள் உட்கொள்ளவேண்டும்.

இரவு உணவு

வறுக்கப்பட்ட மீன், வதக்கிய காய்கறி கலவைகள் மற்றும் சிறிதளவு பழுப்பு அரிசி உட்கொள்ளவும்.