நகைச்சுவை மேதை சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் 'குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்'!
Santhya
அவர்கள் இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய 'JP: THE LEGEND OF CHANDRABABU' நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார்.
இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.