உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழம்

undefined

கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை அடிக்கடி விரும்பி சாப்பிடலாம்.
உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
வைட்டமின் 'சி' அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றல் சக்தியை அதிகம் தரக்கூடியது.
மாரடைப்பை தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. இதய தமனிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கவும் 'கிவி' பழம் உதவுகிறது.
கிவி பழம், இனிப்பானதுதான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது.
மலச்சிக்கலுக்கு மருந்தாக கிவி பயன்படுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories