Maalaimalar
பவுர்ணமி இன்று மதியம் 12.50 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று கிரிவலம் செல்வது சிறப்பானதாகும்.
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழைப்பொழிவு 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் மழைக்கு பின்பு கிரிவலம் செல்லலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிவுறுத்தி உள்ளார்.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் இடி, மின்னலின் போது மரங்களுக்கு அடியில் நிற்பது, நடப்பதை தவிர்ப்பது அவசியம்.