மெதுவாக கொல்லும் விஷமாக மாறும் அன்றாட பழக்கங்கள்

Rebecca

இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது.
நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' (அமைதியான கொலையாளி) என்று சித்தரிக்கப்படுவதுண்டு. மன அழுத்தம் சில நிமிடங்களோ, சில நாட்களோ நீடிப்பதே சிக்கலானது.
ஆனால் நாள் கணக்கில் மன அழுத்தத்துடனே இருப்பது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும்.
எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்ய வேண்டும். வெறுப்புடனோ, அதிருப்தியுடனோ அந்த வேலையை செய்யக்கூடாது. ஆர்வம் இல்லாமல் இருந்தால் அந்த வேலையை தொடரக்கூடாது. சிறிது ஓய்வுக்கு பிறகோ, அந்த வேலை மீது ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டோ பின் செய்யலாம்.
ஆனால் வெறுப்புடன் வேலை செய்வது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் கேடு விளைவிக்கும். தொடர் அதிருப்தியுடன் வேலை செய்வது தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதே நிலை தொடர்ந்தால் உடலை கொல்லும் மெதுவான விஷமாக மாறிவிடும்.
நீங்கள் பழகும் நபர்கள், உங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள் உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியை பாராட்டும் நல் மனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
அப்படி அல்லாமல் உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களாகவோ, உங்களின் செயல்பாடுகளை குறை கூறுபவர்களாகவோ, உங்கள் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் உங்கள் மன ஆரோக்கியத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
துரித உணவை தொடர்ந்து உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக கலந்திருக்கும். இவை உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வித்திடக்கூடும்.
உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மனதுக்கு பிடித்தமானவர்களின் செயல்பாடோ, நெருங்கிய நண்பர்களின் செயல்பாடோ வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலோ, விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தாலோ தயங்காமல் அதுபற்றி விவாதித்துவிட வேண்டும்.
அதைவிடுத்து உணர்ச்சிகளை அடக்குவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து மன நோயாக மாறக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.
காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories