அதிக சூரிய ஒளியால் கண்களில் புற்றுநோய் ஏற்படும்?

Rebecca

சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும்.
தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது ‘போட்டோகெராடிடிஸ்’ எனப்படும் நோய் பாதிப்பு உண்டாகும்.
குறிப்பாக கண் இமைகள், கார்னியா மற்றும் கண்ணின் முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.
வெப்பத்தின் வெளிப்பாடு அதிகரிக்கும்போது கண் இமைகள் மற்றும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
சூரியனால் சருமத்தை விட கண்கள்தான் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும்.
சருமம் இயற்கையாகவே புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. மெலனின் எனும் நிறமி அதற்கு உதவுகிறது.
அதுபோல் கண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.