தீபாவளி ஸ்பெஷல்: பாரம்பரிய அதிரசம்!

Maalaimalar

தீபாவளி பண்டிகையின் பாரம்பரிய இனிப்புகளில் அதிரசத்திற்கு தனி இடம் உண்டு.

பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், எண்ணெய் ஆகியவை அதிரசம் செய்யத் தேவையானவை.

பச்சரிசியை ஊறவைத்து, தண்ணீரை வடித்து நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வெல்லத்தைச் சரியான பதத்தில் பாகு காய்ச்சுவதுதான் சுவையான அதிரசத்தின் ரகசியம்.

அரிசி மாவுடன் வெல்லப் பாகு, ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பிசைந்து ஓய்வில் வைக்க வேண்டும்.

மாவைத் தட்டையாகத் தட்டி, மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்க வேண்டும்.

மாவின் பதம், வெல்லப் பாகு, எண்ணெயின் வெப்பம் ஆகியவை அதிரசத்தின் சுவையையும் மென்மையையும் தீர்மானிக்கின்றன.