மழைக்காலத்தில் சாப்பிட தோன்றும் சுடச்சுட சுவையான உணவுகள்!

Maalaimalar

இஞ்சி ஏலக்காய் டீ - ஜன்னலோரம் அமர்ந்து, மழைத்துளிகளை ரசித்தபடி குடிப்பதே தனி சுகம் தான்!

மசாலா சுண்டல் - தேங்காய் துருவல், மாங்காய் துண்டுடன் காரசாரமாக சாப்பிட செம டேஸ்ட்.

கார பணியாரம் - குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மொறுமொறு ஸ்நாக்ஸ்...

சுடச்சுட சோளம் சுட்டது - மிளகாய், எலுமிச்சை, உப்பு தடவி சுட்ட சோளம்... மழையே பொறாமைப்படும்...

மழைக்கு ராஜானே இதுதான்... பிரட் ஆம்லெட்..ஊட்டி - கொடைக்கானல் மாதிரி..

வெங்காய பஜ்ஜி - மழைச்சாரலில் தேங்காய் சட்னியுடன் சுடச்சுட சாப்பிட்டால், அதன் ருசியே தனி!

சுடச்சுட மசால் வடை - கரகரப்பாக, வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் டீக்கு சரியான ஜோடி.

பருப்பு ரசம் சாதம் + அப்பளம் - சுடச்சுட ரசம் சாதம், சூடான அப்பளத்துடன்.. அடடா...!