அதிகம் கனமுள்ள கல்லை தோசைக்கும், கனம் அதிகம் இல்லாத கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்..சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்..வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்..கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்..சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்..வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.