கோடிகளை அள்ளும் டெட்பூல்& வோல்வரின் காம்போ... இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

Santhya

இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளது.
ஆங்கிலத்தில் மட்டும் இல்லாமல் இப்படத்திற்கு ஐதராபாதில் கட் அவுட், பேனர் என நம்மூர் ஹீரோக்களுக்கு வழிபாடு நடத்தும் வகையில் மக்கள் கொண்டாடினர்.
இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 20 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.