தர்ஷன் நடிப்பில் உருவான "ஹவுஸ் மேட்ஸ்" அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Rebecca
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கனா'.இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நடித்த கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.
இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார்.
இந்த வரிசையில், நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ப்ளேஸ்மித் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு "ஹவுஸ் மேட்ஸ்" என தலைப்பிடப்பட்டு உள்ளது.