Maalaimalar
மல்லிகை, முல்லை, நந்தியாவட்டம், பாரிஜாதம், வெண்சங்கு, வெண்தாமரை மலரிட்டு வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.
செம்பருத்தி, அரளி, ரோஜா, நாகலிங்கப்பூ சாற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
மனோரஞ்சிதம், தாழம்பூ, மரிக்கொழுந்து சாற்றி வழிபட்டால் புத்தி கூர்மை தெளிவுபெறும்.
கொன்றை மலர், செண்பகம், செவ்வந்திப்பூ சாற்றி வழிபட மங்கலமும் கல்வி வளமையும் வந்து சேரும்.
செவ்வரளி, செந்தாமரை, வெட்சிப்பூ சாற்றி வழிபட உடல் அழகும் பலமும் பெருகும். திருமணத்தடை நீங்கும்.
கருங்குவளை,சங்குப்பூ வைத்து வழிபட சனியின் தாக்கம் குறையும்.
சென்பகம், கதம்ப மலர்களை வைத்து வழிபடுவது வாழ்வில் பிரகாசம் கூடி நல்ல உத்யோகம் கிடைக்கும். கண் பார்வை தெளிவுபெரும்.