சமையல்..சமையல்...

undefined

கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.
உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க அதில் புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர் தன்மையை புளி எடுத்துவிடும்.
அதிகப்படியாக வாங்கி வைத்துள்ள எண்ணெய்யில் பச்சைமிளகாயை போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்காது.
சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.
வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.
றிதளவு உப்புத்தூளை கைகளில் தேய்த்துக்கொண்டால் கறைபிடிக்காது, பிசுபிசுப்பு நீங்கும்.
கறிவேப்பிலை செடி நன்றாக வளர புளித்த மோரை ஊற்றலாம்.
பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது.