சமையலில் ஜமாய்க்க விரும்பும் பெண்ணா நீங்கள் உங்களுக்கான சமையல் குறிப்புகள் part 2

undefined

சாம்பார் வைத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது, மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்த தனியா தூளை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். சாம்பார் கமகமக்கும்.
பிரட் சாண்ட்விச் செய்யும்போது பட்டர், வெள்ளரி, கேரட் வைத்து, அதனுடன் ஏதேனும் முறுக்கு அல்லது மிக்சர் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
வீட்டில் தேங்காய் இல்லாவிட்டால், பொட்டுக்கடலை சிறிது, உப்பு, கொத்தமல்லி, சிறிது புளி சேர்த்து அரைத்து கடுகு தாளித்தால், திடீர் சட்னி தயாராகி விடும்.
தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவி நன்றாக துணியில் துடைத்துவிட்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories