பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

மாலை மலர்

உருளைக்கிழங்கு காரக்கறி செய்வதாக இருந்தால் அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கவும். கூடுதல் சுவையுடன் இருக்கும்.

புதினா அதிகமாக கிடைக்கும் காலத்தில் வாங்கி உலர் வைத்துக்கொள்ள வேண்டும். மசாலா சேர்த்து உணவு தயாரிக்கும்போது இந்த உலர் புதினாவை சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.

பொரித்த அப்பளம் நமுத்து போகாமல் இருக்க வேண்டுமா? சூடு ஆறிய பின் அப்பளத்தை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இரண்டு நாட்கள் என்றாலும் மொறு மொறுப்பு குறையாமல் இருக்கும்.

பக்கோடா செய்யும்போது மொறு மொறுப்பாக இருக்க வேண்டுமா? மாவை கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பு கலந்த தயிரையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

முருங்கை இலையை நெய்யில் பொரித்தெடுத்து கையால் நொறுக்கி மாவுடன் கலந்து தோசை வார்க்கவும். மணமான, சுவையான தோசையை சுவைக்கலாம்.

சப்பாத்தி, பூரி ஆகியவற்றை இரவில் சாப்பிடுகிறீர்களா? ஒரு கரண்டி தயிரில் 3 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணமாகும். நெஞ்சு எரிச்சலும் இருக்காது.

முள்ளங்கியை நன்கு சீவி, கோதுமை மாவுடன் கலந்து மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து நன்றாக பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் சத்தும், சுவையும் கூடும்.