சங்கின் வகைகள்...

Maalaimalar

வலம்புரிச்சங்கு

இதன் சுருள் வலதுபுறமாகத் திரும்பியிருக்கும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் அம்சமாக இது கருதப்படுகிறது.

இடம்புரி சங்கு

சங்குத் துளையின் தொடக்கம் இடதுபுறமாக சுருண்டு திறக்கும் வகையில் அமைந்திருக்கும். பாற்கடலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

அரசிச் சங்கு

வெதுவெதுப்பான அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடற்பகுதிகளில் இந்த இராணிச் சங்கு காணப்படும்

காரச்சங்கு

பாறை நத்தைகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி கடல் நத்தை இனம் ஆகும். மற்ற சங்குகளைத் துளையிடும் திறன் கொண்டது.

பாஞ்சசன்யம்

ஸ்ரீ கிருஷ்ணர் தனது கரத்தில் வைத்திருந்த சங்கிற்கு பாஞ்சன்யம் என்பது பெயர். மகாலட்சுமியின் அம்சமானது.

பிள்ளையார் சங்கு

இயற்கையாகக் கிடைக்கும் இந்த சங்கு விநாயகரை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மிகுந்த ஐஸ்வரியத்தைத் தரும்.