மாலை மலர்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 1 கப்
சுடுநீர் - 2 டம்ளர்
சர்க்கரை - 2 கிண்ணம்
கொய்யாப்பழ விழுது- அரைக் கிண்ணம்
கொய்யாப்பழ துண்டுகள் -தலா 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் துண்டுகள் - தலா 2 தேக்கரண்டி
ஆரஞ்சு புட் கலர்- சிறிது
நெய்- தேவைக்கேற்ப
ஜெல்லி மிட்டாய்- அலங்கரிக்க
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு சுடுநீர் ஊற்றிக் கிளறி 3 மணி நேரம் வைக்கவும். நடுவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிளறி விடவும்.
பிறகு பெரிய கண் உடைய வடிகட்டியால் வடி கட்டவும். திப்பி மேற்புறம் தங்கிவிடும். வடிகட்டிய மாவு நீரில், தேவையான அளவு நீர் விட்டு, அடி கனமான வாணலியில் சுருளக் கிண்டவும்.
சுருண்டு வரும்போது நெய் சேர்க்கவும். மாவு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். அது கரைந்ததும் புட் கலர் சேர்த்து, முந்திரி, பாதாம் துண்டுகள் போட்டு கிளறி, கொய்யாப்பழக் கூழ் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.
பரிமாறும் கண்ணாடி கப்பின் அடியில் நறுக்கிய கொய்யாப் பழத் துண்டுகளைச் சேர்த்து, அதன் மேல் வெந்த அல்வாவை இட்டு, மேலே ஜெல்லி மிட்டாய்களால் அலங்கரிக்கவும்.
பின்னர், பிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். சுவையான 'ஜில்' பழ அல்வா தயார்.