பச்சை கேரட் vs சமைத்த கேரட் ... எப்படி சாப்பிடுவது நல்லது?

மாலை மலர்

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதும் ஆரோக்கியமானதுதான். ஆனால் சமைத்து சாப்பிடும்போது, அதில் உள்ள சில சத்துகளை உடல் எளிதாக உறிஞ்சிக்கொள்ளும்.

சமைக்கும்போது கேரட்டின் செல்கள் மென்மையாகின்றன. அதில் இருக்கும் கரோட்டினாய்டுகளை உடலால் எளிதாக உறிஞ்சிக் கொள்ள முடியும்.

கேரட்டில் பீட்டா-கரோட்டின் அதிகம் இருக்கிறது. இதை உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றிக்கொள்ளும்.

கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ முக்கியமானது.

கேரட்டில் இருக்கும் பீட்டா-கரோட்டின் போன்ற சத்துகள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டவை.

கேரட்டை சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யுடன் சமைத்தோ, சிறிதளவு நல்ல கொழுப்புடன் சேர்த்து சாப்பிடுவதோ பயனுள்ளதாக இருக்கும்.

பச்சை கேரட், சமைத்த கேரட் இரண்டுமே ஆரோக்கியமானது. எனவே இரண்டையும் தவறாமல் சாப்பிட்டு வரலாம்.