Maalaimalar
கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலில் வைட்டமின் ஏ-வாக மாறுகிறது. இது மாலைக்கண் நோயைத் தடுத்து, பார்வைத்திறனை கூர்மையாக்குகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்கின்றன. சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
கேரட் ரத்தத்தைச் சுத்திகரித்து, சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது. சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது.
பச்சையாக கேரட்டை மென்று சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, வாய் துர்நாற்றம் நீங்கும். இது பற்களில் உள்ள கரைகளையும், சொத்தையையும் தடுக்க உதவுகிறது.
கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானம் சீராக நடைபெறும்.
கேரட்டில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.