Maalaimalar
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவும்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவக்கூடும்.
வாழைப்பழத்தில் கலந்திருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கும், சீரான குடல் இயக்கத்திற்கும் உதவிடும். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன.
வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடும்போது சிலருக்கு வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் வரலாம். அப்படி ஏற்பட்டால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட வேண்டுமென்றால் வாழைப்பழத்துடன் தயிர், நட்ஸ், புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.