இருமலின்போது தயிர் சாப்பிடலாமா?

undefined

தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நலம் சேர்த்தாலும் எல்லா சமயங்களிலும் சாப்பிடுவது ஏற்புடையதல்ல என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
குறிப்பாக இரவில் தயிர் சாப்பிடுவதற்கு பரிந்துரைப்பதில்லை. சளி பிரச்சினையை உண்டாக்கும் என்பது அதற்கு காரணமாக இருக்கிறது.
இரவை தவிர்த்து பகல் பொழுதில் சளி, இருமல் பாதிப்பு இருந்தால் தயிர் சாப்பிடலாமா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.
பொதுவாகவே தயிர் குளிர்ச்சி தன்மை கொண்டது.
குளிர்ச்சி நிலவும் மாதங்களில் அதுவும் தொண்டை புண், இருமல் அறிகுறிகள் இருக்கும் சமயங்களில் தயிர் உட்கொண்டால் நிலைமையை மோசமாக்கும்.
சளி, இருமல் பாதிப்பு அதிகமாக இருந்தாலோ, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை கொண்டிருந்தாலோ தயிர் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல.
எப்போதாவது சளி, இருமல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் தயிர் சாப்பிட விரும்பினால் அதனை சற்று சூடாக்கி சாப்பிடுவது நல்லது.
எண்ணெய்யில் கடுகு, கருவேப்பிலை இட்டு தாளித்து அதில் தயிர் கலந்து சாப்பிடலாம்.
அறை வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடத்தில் அமர்ந்தும் தயிர் சாப்பிடலாம்.
தயிர் சாப்பிட்டு எந்தவொரு எதிர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை எனில் தொடர்ந்து மிதமாக உட்கொள்ளலாம்.
பொதுவாக பால் பொருட்கள் இயற்கையில் சளியை உருவாக்கும். ஏற்கனவே உள்ள சளியின் அடர்த்தியை அதிகமாக்க வழிவகுக்கும்.
தயிரில் புரோபயாட்டிக்குகளுடன், துத்தநாகம் நிறைந்துள்ளது.
ஆய்வுகளின்படி துத்தநாகம், சளி அறிகுறிகளின் கால அளவை குறைக்கும். இருப்பினும் குளிர்ந்த வெப்பநிலையில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல.
அறை வெப்பநிலையிலோ, சூடான உணவுகளுடனோ கலந்து உட்கொள்ளலாம். தயிராக சாப்பிடாமல் தயிர் சாதம் தயாரித்து உட்கொள்ளலாம்.
இருமலின்போது இரவு மட்டுமல்ல மதிய உணவுக்கு பிறகு தயிர் மற்றும் தயிர் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
Explore