சர்க்கரை நோயாளிகள் மோர் குடிக்கலாமா!

Rebecca

பாலில் இருந்து வெண்ணையை பிரித்து எடுத்த பின்னர் மீதமுள்ள நீரை மோர் என்று அழைக்கிறோம். கலோரிகள், புரதம், கொழுப்பு , கார்போஹைட்ரேட் இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி, பி6, பி12, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், பான்டோதனிக் ஆசிட் போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் இருக்கின்றன.
வெப்பத்தின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பு சார்ந்த அசௌகரியங்களையும், நோய்களையும் தடுத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த பானமாக மோர் திகழ்கிறது.
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டெக்ஸ்) 35 என்று மிகக் குறைந்த அளவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி மோரை தினமும் குடிக்கலாம்.
மோரில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
மோரில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை பலப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புப்புரை) போன்ற எலும்பு நோய்களை வராமல் தடுக்கிறது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories