பாகற்காய் ஃபிரை

Maalaimalar

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - கால் கிலோ

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - சிறிதளவு

கடலைமாவு - 2 டேபிள் ஸ்பூன்

அரிசிமாவு - 2 டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பாகற்காயை நன்கு கழுவி, விதைகளை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.

வெட்டிய பாகற்காயுடன் உப்பு சேர்த்து பிசைந்து, மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டவும்.

மசாலா கலந்த பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, பாகற்காயை தனித்தனியாக போட்டு நன்கு வேக வைத்து பொரித்து எடுக்கவும்.

இந்த எண்ணெயில் கருவேப்பிலையை பொரித்து சேர்க்க சுவையான பாகற்காய் ஃபிரை தயார்.