மாலை மலர்
வெள்ளரிக்காயில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால் இயற்கையாகவே உடலை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின் கே, உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும், எலும்புகளை பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமானத்திற்கு உதவிடும் சிறந்த நண்பனாக வெள்ளரிக்காய் விளங்கும். அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து, கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவிடும்.
வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் சேர்மங்கள், இதய நோய்க்கு வித்திடும் ஆபத்துக் காரணிகளான கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் அழற்சியை குறைக்க உதவக்கூடும்.
அழகு நிலையங்களில் வெள்ளரிக்காய் துண்டுகள் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம், அதில் இருக்கும் அதிக நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதமாக்குவதுதான்.
வெள்ளரிக்காயில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையை நிர்வகிப்பதற்கு சிறந்த தேர்வாக அமையும்.