Maalaimalar
கோவில்களிலோ அல்லது வீட்டிலோ நெய், எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடுவோம்.
விளக்கேற்றும்போது, இத்தனை முகம்தான் ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. தம் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீபம் ஏற்றி வழிபடலாம்.
ஒரு முக விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும், மன அமைதி உண்டாகும்.
இரண்டு முக விளக்கேற்றி வழிபட்டால் குடும்பம் சிறப்பாக நடைபெறும், தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்.
மூன்று முக விளக்கேற்றி வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும், வெற்றிகள் குவியும்.
நான்கு முக விளக்கேற்றினால் பசு, பூமி போன்ற செல்வங்கள் சேரும், கடன் தொல்லை நீங்கும்.
ஐந்து முக விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வ வளம் பெருகும்.
ஆறு முக விளக்கேற்றினால் கல்வி, புகழ் கூடும். ஏழு முக விளக்கேற்றி வழிபட்டால் அறிவு, நற்பண்பு கூடும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.