பரோஸ் - ஆழ்கடல் உலகத்திற்கு அழைத்து செல்லும் Bambooziya பாடலின் ப்ரோமோ வெளியானது
Santhya
இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர்.
குழந்தைகளை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் பாடலான பம்பூசியா பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.