குடும்பங்கள் பார்க்கும் விதமான அயலான் படத்தின் புதிய அப்டேட்...

Santhya

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'அயலான்' படத்திற்கு, தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் குடும்பங்கள் பார்க்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.