Maalaimalar
ஆவணி மாதத்தில் தான் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானும், கிருஷ்ண பகவானும் அவதரித்ததாக கருதப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திருமாலின் தசாவதாரங்களில் ஒருவரான கிருஷ்ணர் அவதரித்த தினமே 'கிருஷ்ண ஜெயந்தி'யாக கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தியில் 'விநாயகர் சதுர்த்தி' நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஆவணி அவிட்டம் என்பது அந்தணர்கள் புதிய பூணூலை மாற்றிக்கொள்ளும் ஒரு சடங்கு. ஆவணி அவிட்டத்தை 'உபாகர்மா' என்று அழைப்பர். 'உபாகர்மா' என்றால் 'ஆரம்பம்' என்று பொருள்.