உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி செய்கிறீர்களா? தவிர்க்க வேண்டிய 6 விஷயங்கள்

Maalaimalar

மெதுவாக நடத்தல்

சாதாரண வேகத்தில் இயல்பாக நடப்பது கால்களுக்கு இதமளிக்கலாம். ஆனால் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எதிர்க்க அத்தகைய நடைப்பயிற்சி உதவாது.

வார்ம்-அப் தவிர்த்தல்

வார்ம்-அப் செய்யாமல் திடீரென நடைப்பயிற்சியை தொடங்குவது, கூல்-டவுன் செய்யாமல் திடீரென நடைப்பயிற்சியை முடிப்பது இசை இறுக்கம் அல்லது சோர்வுக்கு வழிவகுக்கும்.

தவறான உடல் தோரணை

உடலை நிமிர்த்தாமல் கூன் போட்டு நடந்தாலோ, கைப்பேசியை பார்த்தபடியே நடைப்பயிற்சி செய்தாலோ, அல்லது கால்களை தரையில் இழுத்து வைத்தபடி நடந்தாலோ எந்த பயனுமில்லை.

தவறான காலணிகளை அணிதல்

பழைய ஸ்னீக்கர்கள், செருப்புகள் அல்லது பொருத்தமற்ற காலணிகளைப் பயன்படுத்துவது மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி பாத வலி அல்லது முழங்கால் பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் அத்தகைய காலணிகளை கொண்டு அதிக தூரம் நடக்க முடியாது.

ஒரே பாதையை தேர்வு செய்தல்

தினமும் ஒரே பாதையில் ஒரே வேகத்தில் நடந்தால் உடல் அதற்கு பழகி குறைவான கலோரிகளையை எரிக்க செய்யும். அதனால் உடைல் எடை குறைவதில் தொய்வு உண்டாகும்.

நீரேற்றம் இல்லாமல் இருத்தல்

நடப்பதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதும், நடந்து முடித்த பிறகும் சிறிதளவு தண்ணீர் பருகுவதும் உடல் சோர்வடையாமல் ஆற்றலுடன் இருக்க உதவிடும். கொழுப்பை எரிக்கவும் வித்திடும்.