சமையலில் ஜமாய்க்க விரும்பும் பெண்ணா நீங்கள் உங்களுக்கான சமையல் குறிப்புகள்

undefined

ரவா உப்புமா அல்லது கிச்சடி செய்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு ஒருமுறை கிளறவும். வாசனையும் சுவையும் அற்புதமாக இருக்கும்.
சாம்பார் சாதம் தயார் செய்த பின் 15-20 சுண்டைக் காய்களை நல்லெண்ணெயில் வறுத்து சாதத்தில் கலக்கவும். பிரமாத சுவையுடன் இருக்கும்.
புளியோதரை சாதம் செய்த பின், தனியா 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 6. வெந்தயம் 5 ஸ்பூன், வேர்க்கடலை 10 முதல் 12 வரை, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வாணலியில் வறுத்து பொடி செய்து சாதத்தில் கலக்கவும். அப்போது, தனிச்சுவையுடன் கூடிய புளியோதரை சாப்பிடலாம்.
தக்காளி தொக்கு செய்ய மிக்சியில் தக்காளியுடன் சிறிதுபுளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது வெல்லம், இரண்டு ஸ்பூன் இட்லி மிளகாய்ப் பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து செய்தால் சுவையோ சுவை.
கொத்தமல்லி, புளி, வெல்லம். இட்லி மிளகாய்ப் பொடி, பச்சை மிளகாய் அரைத்து, கடுகு தாளித்தால், தொட்டுக்கொள்ள ருசியான அவசர சட்னி ரெடி.
காலையில் செய்த பொரியல் மீதி இருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா சிறிது சேர்த்து பிசைந்துகொள்ளவும். மைதா மாவில் தோய்த்து, பிரட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கட்லட் தயார்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories