Maalaimalar
சாப்பிடும் முன்பு நிதானமாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
கையில் உணவை குறைவாக எடுங்கள். அதாவது வாய் நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு சாப்பிடுங்கள். உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லுங்கள்.
ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்காதீர்கள். உணவை மென்று விழுங்கும் வரை கைக்கு ஓய்வு கொடுங்கள்.
நீங்கள் சாப்பிட்ட உணவால் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள மூளைக்கு போதிய நேரம் கொடுங்கள்.
அவசரமாக சாப்பிடுவதையும், உணவை மெல்லும்போது பேசுவதையும், சாப்பிடும் நேரத்தில் கைபேசியை பார்ப்பதையும் தவிருங்கள்.