பழந்தமிழர் பயன்படுத்திய நகைகளில் காணப்படும் நவமணிகள்...

Maalaimalar

மாணிக்கம்

நவக்கிரகங்களின் அரசராகிய சூரியனைக் குறிக்கிறது. தலைமைப்பண்பு, அதிகாரம் மற்றும் ஆற்றலின் சின்னம்.

முத்து

இது சந்திரனுக்கானதாகும். மன அமைதி, தாய்வழி உறவு மற்றும் நிதானத்தைக் குறிக்கிறது.

பவளம்

செவ்வாய் கிரக ஆற்றலை வெளிப்படுத்தும். வீரம், உடல்பலம், தைரியம் மற்றும் சுறுசுறுப்பைக் குறிக்கும். செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கும்.

மரகதம்

புத்தி கூர்மை, கல்வி, பேச்சுத்திறன் மற்றும் வியாபார அறிவைக் குறிக்கும் புதனுக்கான ஒன்றாகும்.

புட்பராகம்

ஆன்மீக அறிவு, ஞானம், அதிர்ஷ்டம் மற்றும் ஆசிர்வாதத்தின் வடிவமான குருவின் சின்னம். செல்வ வளம், நல்ல அதிர்ஷ்டம், திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தரும்.

வைரம்

சுக்கிரனின் சக்தியை பிரதிபலிக்கும். கலைத்துறை வெற்றி, சொத்துக்கள் சேர்க்கை மற்றும் கவர்ச்சியை அதிகரிக்கும்.

நீலம்

சனியின் கதிர்வீச்சை பிரதிபலித்து மிளிரும். தொழில் முன்னேற்றம் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும்.

கோமேதகம்

உலகியல் ஆசைகள், எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் லட்சியங்களைக் குறிக்கும். இராகுவின் சக்திகளை கொண்டிருக்கும்.

வைடூரியம்

கண் பார்வைத் திறனை மேம்படுத்தும், பேச்சுக்குறைபாடுகளைச் சரிசெய்யும். கேதுவின் சக்தியை கொண்டிருக்கும்.