சமூகநீதியின் கருப்பு வரலாற்றை பேசும் திரைப்படம் - அன்புமணி பாராட்டு
Santhya
இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நந்தன் படத்தை பாராட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், நடிகர் சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது.
உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.