அமோனியா வாயு... நன்மையும் - தீமையும்

Maalaimalar

அமோனியா வாயு காரத்தன்மை உடைய, நிறமற்ற ஒரு வாயு. இதன் வேதியியல் மூலக்கூறு வாய்ப்பாடு NH3.

தொழிற்சாலைகளில் 'ஹேபர் முறை' மூலம் நைட்ரஜன், ஹைட்ரஜன் ஆகிய அணுக்களை ஒன்றாக இணைத்து அமோனியா வாயு தயாரிக்கப்படுகிறது.

விவசாயத்திற்குத் தேவையான நைட்ரஜன், பொட்டாசியம், யூரியா போன்ற உரங்கள் தயாரிக்க அமோனியா இன்றியமையாதது.

உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டிகளில் இது குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.

காற்றில் கலந்த அமோனியா வாயுவை மனிதர்கள் சுவாசித்தால் கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் கடுமையான எரிச்சல் ஏற்படும்.

அமோனியா வாயுவை அதிகளவு சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நுரையீரலை பாதித்து உயிரிழப்பு நேரிடும்.

அமோனியா வாயு கசிவு ஏற்பட்டால் உடனடியாக மூக்கு, வாயை ஈரத்துணியால் மூடிக்கொண்டு, காற்றின் திசைக்கு எதிர்திசையில் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.