மதுவும் உடல்நலக் கேடும்...

Maalaimalar

கல்லீரல்

கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, அழற்சி ஏற்படும். பின் வீக்கம் ஏற்பட்டு செல்கள் அழியத் தொடங்கும்.

மூளை

நரம்புச் செல்களின் அளவு சுருங்குவதால் மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறன் குறைகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் திடீர் பக்கவாதம் மற்றும் மரணம் ஏற்படுகிறது.

இதயம்

மது அருந்துவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இதன் காரணமாக பக்கவாதம் ஏற்படும்.

மஞ்சள் கமாலை

கண்கள் மற்றும் தோல் பகுதி அடர் மஞ்சள் நிறமாக மாறும்.

புற்றுநோய்

உலக சுகாதார நிறுவனம் மதுவை முதல் வகை புற்றுநோய் காரணியாக வகைப்படுத்தியுள்ளது. மது அருந்துவது, உடலில் குறைந்தது 7 இடங்களிலாவது புற்றுநோயை உருவாக்குகிறது.

நீண்டகால விளைவுகள்

கணைய அழற்சி மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.