தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியானது..இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது..விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.."குட் பேட் அக்லி" அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது..தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்து முடித்த நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ளார்..தற்போது அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு, குட் பேட் அக்லி வெளியீட்டை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories