மீண்டும் நடிப்பேனா? ரம்பா கூறிய பதில் இதுதான்

Santhya

தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா சுந்தர புருஷன் செங்கோட்டை அருணாச்சலம் காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் பல வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ரம்பா தற்போது பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். எனவே அவரை மீண்டும் திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.