அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் எளிமையாக கலந்துகொண்ட சூரி

Santhya

ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்
வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார்
அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என அனைவரோடும் செல்பி எடுத்துக் கொண்டார்.