'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் இளைய மகளின் திருமண புகைப்படங்கள்...

Maalaimalar

அஞ்சனா அர்ஜுனும் அவரது காதலர் இசயா நட்டரும் கடந்த 14 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோமோ ஏரிக்கரையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு தனது இளைய மகள் அஞ்சனா என்றால் அலாதி பிரியமாம்.

சிறு வயது முதலே ஃபேஷன் மற்றும் மாடர்ன் டிசைனிங் துறையில் அஞ்சனாவுக்கு அதீத ஆர்வம் இருந்து வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி இருவீட்டுப் பெற்றோர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் நடந்தது.

அஞ்சனாவின் அக்கா ஐஸ்வர்யா தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அப்பா அர்ஜுன், அக்கா ஐஸ்வர்யா என சினிமாவில் இருந்தாலும், அஞ்சனாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் வரவில்லை.

தனது சொந்தக் காலில் நிற்க விரும்பிய அஞ்சனா, தொழில்முனைவில் கவனம் செலுத்தினார்.

அஞ்சனாவின் கணவரான இசயா நட்டர், அஞ்சனாவின் கல்லூரித் தோழர் & ஃபேஷன் துறையில் தொழில்முறை நிபுணர்.

சர்வதேச தரத்திலான பிரீமியம் வடிவமைப்பாளர் கைப்பைகள் என்ற சொந்த பிராண்ட் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

14 வருடக் காதலைத் திருமண பந்தமாக மாற்றியுள்ள இந்த க்யூட் ஜோடி, தங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது!

அஞ்சனா - இசயா தம்பதியின் க்யூட்டான திருமணப் புகைப்படங்களைப் பார்த்து பிரபலங்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அஞ்சனா 'To forever' என கேப்ஷன் எழுதியுள்ளார்.

14 வருட காதல் பயணத்தைக் குறிக்கும் வகையில், '#14yearslater' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நெகிழ்ந்துள்ளார்.