புண்ணியம் தரும் அபிஷேகம்

Maalaimalar

பொதுவாக ஆலயங்களில் திரவியங்கள், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், பழச்சாறுகள் என 16 வகையான சோடசோபசார அபிஷேகங்கள் இறைவனுக்கு செய்யப்படுகின்றன.

நறுமணம் மிக்க வாசனை திரவியங்களால் இறைவனை நீராட்டினால், ஆரோக்கியமான வாழ்வு அமையும்.

பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய, உடல் பிணிகள் நீங்கி நீடித்த ஆயுள் கிடைக்கும்.

குளிர்ந்த தயிரினால் அபிஷேகம் செய்து வழிபட, குழந்தைப் பேறு கிடைக்கும்.

பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்ய, பாவ நிவர்த்தி ஏற்படும்.

சந்தனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட, இல்லத்தில் லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் பெருகும்.