ஆஷாட நவராத்ரியின் நவ வாராஹிகள்...

Maalaimalar

ஆதி வாராஹி

வாராஹியின் மூல வடிவம், வாழ்வில் நிலையான தன்மையைத் தந்து, கர்ம வினைகளை நீக்கி, நீண்ட ஆயுளையும் நற்பெயரையும் வழங்குவாள்.

மகா வாராஹி

சகல கலைகளும், பேராற்றலும் பொருந்திய பிரம்மாண்டமான வடிவம். மன வலிமையைத் தந்து, எடுத்த காரியங்கள் அனைத்திலும் மாபெரும் வெற்றியைத் தருபவள்.

லகு வாராஹி

மிகவும் எளிமையான மற்றும் சாந்தமான தோற்றம் கொண்ட வடிவம்.மனதில் உள்ள தேவையற்ற பயத்தைப் போக்கி, நிம்மதியையும் அமைதியையும் தருபவள்.

ஸ்வப்ன வாராஹி

நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே உணர்த்துவாள், குழப்பங்களைத் தீர்த்து நல்வழி காட்டுவாள். பக்தர்களின் கனவில் தோன்றி வழிகாட்டுபவள்.

அஸ்வாரூட வாராஹி

குதிரை வாகனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் வடிவம். அன்னை லலிதாம்பிகையின் படைகளை வழிநடத்துபவள். எதிரிகளை வெல்லும் ஆற்றலையும், வாழ்வில் மிக வேகமான முன்னேற்றத்தையும் தருபவள்.

கிரிய வாராஹி

கர்மாவிற்கு அதிபதியான வடிவம். நாம் செய்யும் தொழிலில் அல்லது வியாபாரத்தில் உள்ள தடைகளை நீக்கி, தொடர் லாபத்தையும் வளர்ச்சியையும் தருபவள்.

வார்த்தாளி வாராஹி

வாராஹியின் முக்கியத் தூதுவர் மற்றும் நீதி தேவதை. வாக்கு வன்மையைத் தருவாள், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு அளிப்பாள் மற்றும் வழக்கு விவகாரங்களில் வெற்றியைத் தருபவள்.

தூம்ர வாராஹி

உக்கிரமான தோற்றமும், ஆக்ரோஷமான வடிவமும் கொண்டவள். தீராத நோய்களையும், கண்திருஷ்டி மற்றும் செய்வினை போன்ற எதிர்மறை ஆற்றல்களை அடியோடு அழிப்பவள்.

உன்மத்த பைரவி வாராஹி

பைரவரின் பேராற்றலோடு இணைந்து உச்சக்கட்ட உக்கிரத்துடன் தீமைகளை சம்ஹாரம் செய்யும் வடிவம். எவராலும் வெல்ல முடியாத பாதுகாப்பைத் தன் பக்தர்களுக்கு ஒரு வைரக் கவசம் போல வழங்குபவள்.