Maalaimalar
வெள்ளிக்கிழமை வளர்பிறையில் சதுர்த்தியோடு ஆடி மாதம் தொடங்குவதால் விநாயகரை வழிபட்டு விரதம் தொடங்குவது சிறப்பு. மகாபாரத போரின் முதல் நாள். அரவான் பலியை சிறப்பிக்கும் படி தேங்காய் சுட்டு வழிபடுவர்.
வராகி அம்மனுக்கு இந்த ஒன்பது நாளும் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அலங்காரங்களுடன் பிரமாண்ட விழாவாக கொண்டாடப்படும்.
கோமதி அம்மனின் தவத்திற்கு இரங்கி, சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தரும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா கொண்டாட்டம்.
அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்பம் நலம் பெரும். வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்கும்.
நதிகளில் நீராடி வழிபட சிறப்பு. மகாபாரதப் போர் முடிந்து பாண்டவர்கள் ஆற்றுக்கு சென்று ஆயுதங்களை கழுவி நீராடிய நாளாக கருதப்படுகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.
முருகனுக்குரிய நாள். பால்குடம், காவடி அழகு குத்துதல் போன்றவை இந்நாளில் செய்து முருகனை வழிபடுவது சிறப்பு.
நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்.
ஆண்டாள் பூமியில் அவதரித்த தினம். சகல கோவிலிலும் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும். அம்மனுக்கு வலையல் சாற்றி வழிபடுவது சிறப்பு.
திருமணம் கைகூடிட, மஞ்சள் தேய்த்து குளித்து அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.
அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், மாவிளக்கு போடுதல், பொங்கல் வைத்தல் சிறப்பு.