Maalaimalar
Step 1 : நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் இடித்த பூண்டை போட்டு வதக்கவும்.
Step 2 : அடுப்பை மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
Step 3 : மசாலா நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்ததும் தக்காளி சேர்த்து வதக்கி தொக்கு பதத்திற்கு கொண்டுவரவும்.
Step 4 : நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, வேக வைத்துள்ள மொச்சையையும் அதில் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
Step 5 : காய்கறி மசாலா கலவையில் புளி கரசலை சேர்த்து, தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
Step 6 : இறுதியாக கருவாடு சேர்த்து 5 நிமிடங்கள் குழம்பை கொதிக்க வைத்து இறக்கினால் கிராமத்து ஸ்டைல் கருவாட்டு குழம்பு தயார்.