Maalaimalar
ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரத் திருநாளில் இந்த வளைகாப்பு வைபவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் அம்மனுக்கு பட்டுப் புடவை சாற்றி, மடியில் பயிர்கள் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக அலங்கரிப்பார்கள்.
இந்நாளில் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
பூஜை முடிந்த பிறகு அங்கு தரப்படும் பயிர் பிரசாத்தை உண்ண குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையால் வாங்கி கொடுத்ததும் அம்மனை தரிசித்தும் வாருங்கள். சுமங்கலி பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிட்டும்.