Maalaimalar
உங்கள் தலைமுடி வகைக்கு ஏற்ற ஷாம்பூ பயன்படுத்தி, தலையைச் சுத்தமாகப் பராமரியுங்கள்.
முடி வளர்ச்சிக்கு உதவும் முட்டை, பருப்பு வகைகள், பால் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இறுக்கமான கொண்டை, போனிடெயில் போன்ற சிகை அலங்காரங்களைக் குறையுங்கள்.
ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஈரமான முடியை வலுவாக இழுத்துச் சீவாமல், மெதுவாகச் சிக்குகளை நீக்குங்கள்.
இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சமச்சீர் உணவைச் சாப்பிடுங்கள்.
போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பழக்கங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவும்.