லட்சத்தீவில் பார்க்க வேண்டிய 7 அழகான சுற்றுலாத் தலங்கள் 🏝️

Maalaimalar

இந்தியாவின் குட்டி மாலத்தீவு என்று அழைக்கப்படும் லட்சத்தீவு, நீலநிறக் கடல், வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள் என இயற்கை அழகால் சுற்றுலாப் பயணிகளை வியக்க வைக்கிறது.

நீல நிறக் கடலும் வெள்ளை மணல் கடற்கரையும் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய அகத்தி தீவு. ஸ்நோர்கெலிங் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம்.

அமைதியான சூழல், தெளிவான கடல் நீர், அழகிய சூரிய அஸ்தமனம் என இயற்கையை ரசிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற சொர்க்கம் பங்காரம் தீவு.

உயரமான கலங்கரை விளக்கம், தனித்துவமான உள்ளூர் கலாச்சாரம், அழகிய கடற்கரை எனப் பல சிறப்புகளைக் கொண்டது மினிக்காய் தீவு.

லட்சத்தீவின் தலைநகரான கவரத்தி தீவில் அழகிய குளங்கள், கடல் விளையாட்டுகள் மற்றும் புகழ்பெற்ற உஜ்ரா மசூதியைக் காணலாம்.

ஸ்கூபா டைவிங் செய்வதற்குப் புகழ்பெற்ற இடம். கண்ணாடி போன்ற தெளிவான கடல் நீரில் வண்ணமயமான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைக் கட்மத் தீவில் காணலாம்.

பவளப்பாறைகள் நிறைந்த இந்தத் தீவில் ஸ்நோர்கெலிங், கயாக்கிங், படகு சவாரி போன்ற சாகச விளையாட்டுகளை கல்பேனி தீவில் ரசிக்கலாம்.

கவரத்தியில் அமைந்துள்ள இந்த டைவிங் மையத்தில் கடலுக்கு அடியில் சென்று பவளப்பாறைகள், ஆமைகள், வண்ணமயமான மீன்களைக் கண்டு ரசிக்கலாம்.