Maalaimalar
நவராத்திரியின் 5-ம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள்.
வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் போட வேண்டும். நல்லெண்ணெய் கொண்டு 17 அகல் தீபங்கள் ஏற்றவது சிறந்தது.
கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள்.
தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.
வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும்.
புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள்.
"வருவாய் வருவாய் வைஷ்ணவியே..
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே..
அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே" என பாடி துதித்தால் வரம் தருவாள்.