மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள் நவ.28, 1990
பதிவு: நவம்பர் 28, 2020 05:26
மார்க்ரெட் தாட்சர்
மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டவர். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சிரிசம் என அழைக்கப்பட்டது.
1987-ம் ஆண்டும் மூன்றாவது முறையாக பிரதமரான இவர் அந்த காலக்கட்டத்தில் விதித்த கம்யூனிட்டி சார்ஜ் என்ற வரி மக்களிடையே இவர்மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 1990-ம் ஆண்டு இதே நாள் தமது பதவியிலிருந்து விலகினார்.
இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:
* 1975 - கிழக்குத் திமோர் போர்ச்சுக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* 1979 - நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 257 பேரும் இறந்தனர்.
* 1987 - தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 159 பேரும் இறந்தனர்.
• 1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவியை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
• 1991 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
• 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
• 2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.